"என் சம்சாரத்தை அடிச்சு.."மூளைக்கு ஏறிய பணத்தாசை.. படுகேவலமான செயல்..இது அரக்கத்தனத்தின் உச்சம்
மடத்துக்குளம் வஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்த குமார், தனது இரண்டரை ஏக்கர் நில பத்திரத்தை தாந்தோணி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம் அடமானம் வைத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டு நிலத்தை அபகரிக்கும் நோக்கில், ஏமாற்றி மகாலிங்கம் அவரது மனைவி ஜெயசுதா பெயரில் மாற்றிவிட்டார் என குமார் நீதிமன்றம் சென்றுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் வேளையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் குமார் மக்காச்சோளம் விதைத்துள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் டிராக்டரை கொண்டு பயிர்களை அழித்துள்ளார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் வீசியுள்ளனர். தடுக்க சென்ற குமாரின் மனைவி, மகன், தாயாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரில், கணியூர் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, மகாலிங்கம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மகாலிங்கத்தால் பல விவசாயிகள் இப்படி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.