அசந்து தூங்கிய குடும்பம்.. விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முகமது சாலியபுரம் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர், கறிக்கடைக்காரர் முகம்மது சையது சுலைமான். இவர், தனது குடும்பத்துடன் தங்களது பழைய வீட்டில் தூங்கிய நிலையில், இவரது புது வீட்டில், பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் உள்ளிட்டவையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து உள்ளனர். மறுநாள் காலையில் இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த முகம்மது சையது சுலைமான், அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story