மழை நின்றபின்னும் வராத கரண்ட் - கடுப்பான மக்கள் எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பு காட்சி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்று ஓய்ந்து மழை நின்றதும் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், உப்பளம் கிராமத்தில் பெரியார் நகர் பகுதியில் மட்டும் இரவு வரை மின்இணைப்பு வழங்கப்படாதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழை ஓய்ந்தும் மின்சாரம் வழங்காமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். தொடர்ந்து போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உடன் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பொன்னேரி - பழவேற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story