வலியால் துடித்த கர்ப்பிணி பெண்.. சிகிச்சைக்கு முன் நடந்தது என்ன? சகோதரி சொல்லும் திடுக்கிடும் தகவல்.

x

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த முருகேசனின் மனைவி சிவரஞ்சனி கடந்த இரண்டாம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பிரசவ வலியால் துடித்த சிவரஞசனிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்கள் சுகப் பிரசவத்திற்காகக் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. சிவரஞ்சனியின் உறவினர்கள் பல முறை கேட்டுக் கொண்டாலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 6ம் தேதி சிவரஞ்சனிக்கு பிறந்த ஆண குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து குழந்தையை சிதம்பரம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்குச் சிகிச்சையிலிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்