கட்டுக்கடங்காத வெள்ளம் - கம்பீரமாய் நிற்கும் பிரபல முருகன் கோவில் -சிலிர்த்து சிலாகிக்கும் பக்தர்கள்

x

பருவமழை காலத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் கோவிலை வெள்ளம் மூழ்கடிக்கும்... உடனடியாக உற்சவமூர்த்திகள் உண்டியல், சுவாமி சப்பரங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் மேல கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். வெள்ளம் வடிந்த பின்னர் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு நித்திய பூஜைகள், நித்திய வழிபாடு தொடங்கும்... பல நூறாண்டுகளாக இதே முறை பின்பற்றப்படும் நிலையில் எத்தனை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கோவிலில் இதுவரை ஒரு சிதலம் கூட ஏற்பட்டது கிடையாது என பக்தர்கள் சிலாகிக்கின்றனர்...

கோவிலின் பின்பகுதி படகு போன்ற அமைப்பை கொண்ட நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளம் சுவரை சேதப்படுத்தாமல் தண்ணீர் பிரிந்து சென்று விடும்... கோவிலின் உட்பகுதிகளில் கரும்பாறைகளிலேயே உருவாக்கப்பட்ட ஜன்னல் போன்ற அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்குள் புகும் தண்ணீர் அதன் துவாரங்கள் வழியாக வெளியேறி விடும்... 1992, 2021 மற்றும் 2023 போன்ற காலகட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் கன அடி தண்ணீர் சென்றபோதும் கூட கோவிலில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்