தமிழகத்தில் களைகட்டிய குடமுழுக்கு விழா... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

x

தமிழகத்தில் களைகட்டிய குடமுழுக்கு விழா... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ராயபட்டியில் சக்தி விநாயகர் மற்றும் சின்ன மாரியம்மன் கோவிலில் தாரை தப்பட்டை முழுங்க கோபுரக் கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர் வேத மந்திரங்கள் முழங்க கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவிலான வேணுகோபால சாமி கோவிலில் குடமுழுக்கைத் தொடர்ந்து தீபாராதனை, நான்மறை ஓதுதல், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெற்றது... பக்தர்களுக்கு அன்னதானமும் தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.

வேலூர் அணைக்கட்டு தாலுகா மேல் அரசம்பட்டு கிராமத்தில் புதிதாக எழுந்தருளியுள்ள காளியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு காலிங்கராயன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை காவிரியில் புனித நீராடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்... குடமுழுக்கில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்