தேரடி வீதியில் உலா வந்த ராமானுஜர் - கோலாகலமாக நடந்த அவதரார திருவிழா
ராமானுஜரின் 1007-வது அவதரார திருவிழாவையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்த உற்சவர் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரடி வீதி, திருவள்ளூர் சாலை, திருமங்கையாழ்வார் தெரு என முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் தேர் மதியம் 12 மணிக்கு நிலைவந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு மோர், பானகம், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
Next Story