சிறந்த பால் உற்பத்தியாளர், செயலாளர்களுக்கு பரிசு..பிரம்மிக்க வைத்த ஆட்சியர் | Dindigul

x

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறந்த பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கி பாராட்டினார். அதன்படி, சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பரிசுகளை புளியமரத்துக்கோட்டையை சேர்ந்த சின்னதுரை, பால்ராஜ், பரவேல் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கி கெளரவித்தார். அதேபோல், சிறந்த சங்க செயலாளர்களாக புளியமரத்துக்கோட்டையை சேர்ந்த சக்திவேல், ஆரோக்கியதாஸ், ஆனைக்குட்டி ஆகியோர் பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்