#JUSTIN || உணவு எடுத்துவர சென்ற அம்மா - குழந்தையை தூக்கி சென்ற எமன் - சோகத்தில் மூழ்கிய கரூர்

x

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால் கரை பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இன்று இப்பகுதியில் உள்ள கணபதி சித்ரா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் கிஷாந்த்.

வீட்டிலிருந்தே வெளியே வந்து வாய்க்கால் கரை பகுதியில் கஷாந்துக்கு அவரது தாய் சித்ரா சாதம் ஊட்டியுள்ளார்.

தொடர்ந்து வீட்டினுள் சென்று மீண்டும் சாதம் எடுத்து வந்து பார்த்து உள்ளார் அப்போது கிசான் காணவில்லை

ஒருவேளை கிசாந்த் வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார் உடனடியாக விரைந்து வந்த ஊழியர்கள் கட்டளை மேட்டு வாய்க்கால் வெளியே செல்லும் தண்ணீரை குறைத்தனர்

தொடர்ந்து மாயனூர் போலீசார் மற்றும் கரூர் தீயணைப்பை துறையினருக்கு தகவல் கொடுத்தனர்

வாய்க்காலில் செல்லும் தண்ணீர் குறைந்ததும் அருகில் உள்ளவர்கள் தண்ணீரில் இறங்கி தேடினர் அப்பொழுது கிசான் சடலமாக மீட்கப்பட்டார்

கடலமாக கண்டெடுக்கப்பட்ட கிசாந்தை கண்ட உடலைக் கண்டதும் அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்

ஓடி ஆடி விளையாட வேண்டிய சிறுவன் வாய்க்காலில் பரிதாமாக உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


தொடர்ந்து சிறுவன் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்