சென்னை RTO அலுவலகத்தில் நடக்கும் முறைகேடு.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை

x

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், சுதாகர் என்பவரிடம் இருந்து ஒரு ஜே.சி.பி. வாகனத்தை வாங்கியுள்ளார். இதனை சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்றபோது, ஜேசிபி வாகனம் சென்னை கே.கே நகரில் உள்ள ஒருவரின் பெயரில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சென்னை கே.கே நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ராமச்சந்திரன் முறையிட்டார். இதனை கேட்டுக்கொண்ட வட்டார அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆனந்தராமன், “தவறு ஏற்பட்டு விட்டது... ஒரு வாரத்தில் சரி செய்து தருகிறேன்“ என தெரிவித்துள்ளார். ஆனால், ஏழு மாதங்களாகியும் சரி செய்து தரப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராமச்சந்திரன், எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் நேரில் ஆய்வு செய்த பிறகுதான் சான்றிதழ் வழங்கப்படும்... ஆனால் கே.கே.நகர் ஆர்.டி.ஓ.வில் பணத்தை வாங்கிக்கொண்டு திருட்டு வாகனங்களுக்கு போலி சான்றிதழ்கள் தருகின்றனர் என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்