நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு போதைப்பொருள்..சென்னை போலீசுக்கு ஷாக் கொடுத்த லேடி..
சென்னை எழும்பூரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சொகுசு காரை சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் இரண்டு பேர் தப்பி ஓடிய நிலையில், காரில் இருந்து 70 லட்ச ரூபாய் மதிப்பிலான 705 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக அசாமைச் சேர்ந்த பெண் பாத்திமா பேகம், நட்சத்திர ஹோட்டல்களுக்கு காய்கறி வியாபாரம் செய்யும் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரை கைது செய்தனர். சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story