"தமிழர்களை நெனச்சா பெருமையா இருக்கு..எனக்கு இப்பவே புல்லரிக்குது"தமிழர்களை பெருமைப்படுத்தும் வீடியோ
தமிழக அரசின் வேர்களை தேடி திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக, நெல்லை வந்த அயலாக தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் வேர்களை தேடி திட்டத்தின் மூலம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த அயலாக தமிழ் மாணவர்கள் நெல்லை வந்தனர். நெல்லையப்பர் கோவில்,வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். அப்போது பேசிய அவர்கள், பிரமிடு, சீன பெருஞ்சுவர் உள்ளிட்டவைகளை காட்டிலும் தமிழர்களால் கட்டப்பட்ட அணைகள் உலக அதிசயங்களில் இடம் பெற வேண்டியவை என்று கூறினார். தமிழர்களின் கட்டிடக்கலைகளை பார்த்து வியப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story