பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகம் சொன்ன திடுக் தகவல் - வெடித்த பூகம்பம் - வீதியில் போராட்டம்

x

திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கீழ் செயல்படும் தனியார் பள்ளி சுமார் 47 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களை அழைத்த பள்ளி நிர்வாகம், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பள்ளி மூடப்படும் என்றும், அதற்குள் மாணவர்களை வேறொரு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பள்ளி நுழைவு வாயிலில் தர்ணா செய்த நிலையில், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்த போலீசார் பெற்றோரிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்