வாழ்க்கை மாறும் நேரத்தில்.. ஒரே அடியாக புரட்டிபோட்ட கனமழை - கண்ணீருடன் கதறும் விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தது. முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கரையான்மேடு, அம்மளூர் ,தோலி, புத்தன்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தது. மழையால் வயல் முழுக்க தண்ணீர் நிரம்பியுள்ளதால், நெற்பயிர்கள் அழுகிவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி, உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story