விசாரணைக்கு வந்த போது சிகரெட் தராததால் கொந்தளித்த கைதி.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

x

சேலம் மாவட்டம் ஒட்டியபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான நரேஷ்குமார் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக சேலம் மாவட்ட ஆயுதப்படை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமானுஜம் மற்றும் இரண்டு தலைமை காவலர்கள் நரேஷ்குமாரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். அப்பொழுது மகளிர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த நரேஷ்குமார் போலீசாரிடம் சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நரேஷ்குமார் அங்கிருந்த காவலர்களை அடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்