மோசடி வலையை வீசிய ரியல் எஸ்டேட் அதிபர்.. பறிபோன பல லட்சங்கள்.. அலேக்காக தூக்கிய போலீஸ்
கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோல்டன் கார்டன் என்ற பெயரில் தங்கராஜ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வருகிறார். பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிவித்து அதில் தவணை முறைகளில் பணம் கட்டுபவர்களுக்கு வீட்டுமனை வழங்குவதாகக் கூறி வந்திருக்கிறார்.இந்த திட்டங்களில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள நிலத்தை விற்பதாகக் கூறி சுமார் 30க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ 70 லட்சம் வரை வசூலித்து இருக்கிறார் தங்கராஜ். ஆனால் நிலத்தை வழங்காமல் மோசடி செய்ததால் ரத்தனகிரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து இருக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தங்கராஜைக் கைது செய்து அவரிடம் இருந்த ஜாக்குவார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story