போலீசாரிடம் வம்பு.. தனக்கு தானே ஆப்பை செதுக்கி வைத்த இளைஞர்.. அடுத்து நடந்த அட்ராசிட்டி தான் ஹைலைட்
ஈரோட்டில், சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை இளைஞர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் தவிர, மற்ற தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கட் என்பவரை நிறுத்தி அபராதம் விதிக்க, போக்குவத்து போலீசார் ஆவணங்களை கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கட், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மற்ற இருசக்கர வாகனங்களை மறிக்க தொடங்கினார். இதனையடுத்து நோ-என்ட்ரி, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஹெல்மெட் அணியாதது ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Next Story