பெட்டிக்கடை பெண் செய்த வேலை... தோட்டத்தை தோண்டியதும் அதிர்ந்த போலீஸ் - பண்ருட்டி அருகே பரபரப்பு
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அடுத்துள்ள உளுந்தாம்பட்டு கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் அம்சவல்லி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பெட்டிக்கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்ததை அடுத்து, அவரது வீட்டு தோட்டத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டு தோட்டத்தில் தோண்டிய போது 13 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் வெளியே வந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் , அம்சவல்லியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story