தீபாவளி அன்று `மரண நாடகம்' - தலைக்கேறிய கள்ளகாதல் போதை... தலைகீழாக மாற்றிய Report
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் லாரி ஒட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் ஏற்கனவே கணவனை பிரிந்த சித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த் நிலையில் கடந்த தீபாவளி அன்று மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாக சித்ரா போலீசிடம் கூறி இருக்கிறார்.இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு ராஜசேகருக்கு இறுதி அஞ்சலி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜசேகரின் கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு இருப்பதாக வந்து இருக்கிறது.இதனை தொடர்ந்து சித்ராவை அழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் ராஜேசகர் லாரி ஒட்டி வந்த கம்பெனியின் உரிமையாளர் தன்சேகருடன் சித்ராவுக்கு தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த ராஜசேகர் சித்ராவை கண்டித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் தீபாவளி அன்று தனசேகரை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.அதன் பின்னர் தான் சித்ரா
மாரடைப்பு நாடகம் ஆடியதும் தெரியவந்துள்ளது.மேலும் கொலை நடந்த அன்று அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தனசேகர் வந்து சென்றதும் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.