திருட வந்த இடத்தில் பணம் இல்லாததால் கயவர்கள் செய்த பகீர் காரியம்..மாணவர்களின் எதிர்காலமேகேள்விக்குறி

x

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கடந்த 26-ஆம் தேதி பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல், சி.சி.டி.வி. கேமெரா, கதவுகளை உடைத்துள்ளனர். தலைமை ஆசிரியர் அறையில் உள்ள பீரோவில் பணம் இல்லாத‌தால், அங்கு இருந்த மாணவர்களின் வருகை பதிவேடு, மாற்றுச்சான்றிதழ் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். அங்கு உள்ள கம்ப்பூட்டர் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதோடு, வேதியியல் ஆய்வகத்தில் உள்ள பொருட்களையும் உடைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பள்ளியில் ஆய்வு செய்த பள்ளி மேலாண்மை குழு, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக வேதனை தெரிவித்தனர். ஆனால், கடந்த 7ஆம் தேதி இதே பள்ளியில் திருட்டு சம்பவம் நடந்த‌தாகவும், அப்போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், மீண்டும் இப்படி நடந்திருக்காது என்று, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்