ஒரேநாளில் சரிந்த வாரிசு ஆட்சி..கழுத்தை நெறிக்கும் நெருக்கடி..அரசியலில் திடீர் திருப்பம் | Syria

x

சிரியாவின் இடைக்கால பிரதமராக முகம்மது அல் பஷிர் நியமிக்கப்பட்டுள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சியாளர்கள், நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றினர். இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, சிரியாவின் இடைக்கால பிரதமராக முகம்மது அல் பஷிர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்