சாரைப்பாம்புக்கு வந்த சோதனை - விஷயம் தெரிந்ததும் ஓடி வந்த ஸ்நேக் பாபு
மதுரையில் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட சாரைப்பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தை அடுத்த நேதாஜி நகரில் கண்ணன் என்பவரது வீட்டுக்குள் 6 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது குறித்து பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், விரைந்து வந்து பாம்பை பத்திரமாக மீட்ட நிலையில், பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளித்த ஸ்நேக் பாபு, காளவாசலில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பாம்பிற்கு உரிய சிகிச்சை அளித்துள்ளார்.
Next Story