பள்ளிக்குள் புகுந்து போதை ஆசாமி அடாவடி - வெளுத்தெடுத்த மாணவர்கள்

x

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், சுப்பிரமணியன் என்கிற மாற்று திறனாளி ஆசிரியர் சமூகவியல் பாடம் எடுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, வகுப்பறைக்குள் சென்ற போதை ஆசாமி ஒருவர், ஆசிரியரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் அந்த நபரை வெளியேற்றியுள்ளனர். பின்பு பள்ளிக்கு அருகே நின்றுக்கொண்டிருந்த அந்த போதை ஆசாமியை, மாணவர்கள் ஒன்றுசேர்ந்து அடி வெளுத்து வாங்கியதால் அங்கு பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்