"குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து" சென்னையின் பிரபல பள்ளியில் பரபரப்பு
"குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து" சென்னையின் பிரபல பள்ளியில் பரபரப்பு
மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் பிரபலமான தனியார் பள்ளி வளாகத்தில் மெட்ரோ ரயில் திட்ட பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பள்ளி கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள விரிசலை கவனிக்க கோரி பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி கட்டிடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டிய பெற்றோர்கள், பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பெற்றோர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story