கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத சர்ப்ரைஸ்..ரூ.6.5/-கோடியை அள்ளிக்கொடுத்த நிர்வாகம்

x

கரூரை சேர்ந்த தனியார் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள 75 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி ஆச்சரியப்பட வைத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஆசிரியர்களும், ஊழியர்களும் ஆனந்தக் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர். சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் 15ம் ஆண்டு விழாவின் போது பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காக்காவடி கிராமத்தில் பள்ளியின் உரிமையாளர் பெயரில் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை வீட்டு மனைகளாக மாற்றி 11 பேருக்கு வழங்கப்பட்டன... ஒரு மனையின் அளவு ஆயிரத்து 800 சதுரடி முதல் 2 ஆயிரத்து 800 சதுரடி வரை இருக்கும்... இதன் மொத்த மதிப்பு ஆறரை கோடி ஆகும். இதனால் ஆசிரியர்கள் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்