காய்ச்சலுக்காக போட்ட ஊசி..அடுத்து உடலில் நடந்த பெரும் மாற்றம்..துடி துடித்து பிரிந்த உயிர்

x

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ், கடந்த 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள மருந்தகத்திற்கு தனது தாயுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண், மாணவரை பரிசோதித்து ஊசி செலுத்திய நிலையில், மாணவருக்கு உடலில் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மருந்தகத்தில் கேட்ட போது தைலம் தேய்க்க சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து மாணவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், மருந்தகத்தில் ஊசி போட்டதால் தான் தனது மகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் புகாரளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மாணவரின் சாவுக்கு காரணமென கருதி மருந்தகத்தை சந்தோஷின் நண்பர்கள் அடித்து நொறுக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்