கில்லாடி வேலை பார்த்த கவுன்சிலர் `ரெயின்போ' - அதிரடி காட்டிய போலீஸ்

x

கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த ரெயின்போ கணேசன் கீரிப்பட்டி பேரூராட்சி ஏழாவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். 2023 ஆம் ஆண்டு, நரசிங்கபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்த ரெயின்போ கணேசன், வாகனங்களை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, ஜெயக்குமாருக்கு 17 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகையை கொடுக்காமல் இருந்துள்ளார். அதுபோக வாகனங்களின் இன்ஜின் எண்களை மாற்றி அவைகளை விற்க ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயக்குமார் கேட்டபோது அவரை கொலை செய்துவிடுவதாக ரெயின்போ கணேசன் மிரட்டியுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரெயின்போன் கணேசன் மீது போலி ஆவணம் தயாரித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ரெயின்போ கணேசனுக்கு எதிராக மண் கடத்தல், மது விற்பனை, மோசடி செய்தல், கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்