மொத்த ஊரே இருளில்..அடுத்த நடந்த பேரதிர்ச்சி..வீடுகளில் வெடித்த பொருட்கள் | Ramanathapuram
கீழக்கரை நகராட்சியில் பராமரிப்பு பணிக்காக காலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர், மாலை 5 மணியளவில் மீண்டும் மின்சாரம் விநியோகம் தொடங்கிய நிலையில், திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்தது வெடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின்சாதன பேட்டரிகள் திடீரென வெடித்துவிட்டதாகவும், அதனை சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். ஆனால், மின்சாரம் இல்லாததால், வீடுகள், கடைத்தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. அரையாண்டுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், முதியவர்கள், வணிகர்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர், 9 மணி நேரத்திற்குப் பிறகு, அதிகாலை 3 மணியளவில் மின் விநியோகம் சீரானது.