இன்னும் 4 நாட்களில் பிறந்தநாள்..ரசிகருக்கு ரஜினி கொடுத்த மறக்க முடியாத Gift
சென்னையில் நடிகர் ரஜினிகாந்திடம் கையில் ஆட்டோகிராப் வாங்கிய ரசிகர், அதேயிடத்தில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். சென்னையில் கூலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஷாஜி என்ற ரசிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். அவருக்கு ராகவேந்திரா கடவுளின் புகைப்படத்தை கொடுத்த நிலையில், ரசிகரின் வலது கையில் ரஜினிகாந்த் ஆட்டோ கிராப் போட்டுள்ளார். பின்னர் அது அழியாமல் இருக்க, கையில் அதே இடத்தில் ரசிகர் ஷாஜி பச்சை குத்திக் கொண்டார். இதுதொடர்பாக ரஜினி பாடலை இணைத்து வீடியோ ஒன்றையும் ரசிகர் வெளியிட்டுள்ளார்.
Next Story