பொங்கலுக்கு வந்த அபாயம்.. புதுகை விவசாயிகள் எடுத்த மாற்றம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 சதவீத விவசாயிகள் நெல் விவசாயத்திற்கு மாறியதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கரும்பு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருஞ்சுனை, சிறுசுனை ,அன்னவாசல், இலுப்பூர், கரம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு போதுமான விலை கிடைக்காததால் இந்த ஆண்டு பாதி கரும்பு விவசாயிகள் நெல் சாகுபடிக்கு மாறி உள்ளனர். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புக்கு தோகை கிழித்து விடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு அனைத்து கரும்புகளையும் அரசே கொள்முதல் செய்து ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story