"சர்மிளாவின் பெற்றோரை கைது செய்ய வேண்டும்" - உறவினர்கள் தொடர் போராட்டம்

x

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை கடந்த பிப்ரவரி மாதம் பெண் வீட்டார் ஆணவப்படுகொலை செய்தனர். இதனால், மன உளைச்சலில் இருந்த பிரவீனின் மனைவி சர்மிளாவும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், தற்கொலை செய்வதற்கு முன் சர்மிளா எழுதிய கடித்தத்தில் அவரது பெற்றோரை குறிப்பிட்டு எழுதியிருப்பதாக குற்றம் சுமத்திய பிரவீன் வீட்டார், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், பெண்ணின் பிரேத பரிசோதனையை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும் என பிரவீனின் உறவினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை ராஜீவ் அரசு மருத்துவமனைக்கு வந்த வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிமை உறவினர்கள் முற்றுகையிட்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வருவாய் கோட்டாட்சியர் திரும்பிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்