மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - மாடுகளுடன் சாலையில் இறங்கிய கிராம மக்கள்
திருச்சி அருகே மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்குடி, அப்பாத்துரை உள்ளிட்ட ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை திட்டம் கைவிடப்படும் என்பதாலும், அதிக அளவில் வரி கட்ட வேண்டும் என்பதாலும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி - லால்குடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து செனறனர்.
Next Story