விஜயகாந்த் நினைவிடத்தில் திடீர் பரபரப்பு - சம்பவத்தை கச்சிதமாக சமாளித்த பிரேமலதா
விஜயகாந்த் நினைவிடத்தில் வலிப்பு ஏற்பட்ட தொண்டரிடம் நலம் விசாரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அவரை சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மணலியை சேர்ந்த கோபால்சாமி என்பவருக்கு இன்று திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் நினைவிடம் வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பாதிக்கப்பட்ட நபரிடம் உடல் நலம் விசாரித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சை வரவழைத்து, அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைததார்.
Next Story