பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூமின் 26வது கிளை திறப்பு - ஒவ்வொரு பொருட்களுக்கும் தங்க காசு பரிசு
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் பூர்விகா அப்ளையன்சஸ்ஸின் 26வது கிளை திறக்கப்பட்டுள்ளது. பூர்விகா அப்ளையன்சஸ் புதிய பிரமாண்ட கிளையை, பூர்விகா நிறுவனர் யுவராஜ் நட்ராஜ் மற்றும் நிர்வாக இயக்குநர் கன்னி யுவராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளையில், வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் தங்க காசு உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு ஏசி வாங்கினால் ஒரு ஏசி இலவசம் என்ற சிறப்பு அதிரடி பரிசுகள் வழங்கப்படுகிறது. செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் பூர்விகா நிறுவனம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 475 கிளைகள் வைத்துள்ளது.
Next Story