காஞ்சிபுரத்தை கதிகலங்கவிட்ட ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கு - வெளியான புதிய தகவல்
காஞ்சிபுரம் காலண்டர் தெருவைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி,சுமார் 20 ஆண்டுகளுக்குந மேலாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.ஓய்வுக்கு பின், பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில், கஸ்தூரியின் குடும்ப நண்பரான, மதிமுக மாவட்ட செயலரான வளையாபதி மற்றும் அவரது நண்பரான பிரபு ஆகிய 2 பேரும் சேர்ந்து கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் பிரபு ஆகிய 2 பேரையும் ஆகஸ்ட்28 ஆம் தேதி கைது செய்து, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது,இவர்களை போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியதில் சித்திரவாதை செய்தது உறுதியானது. இதையடுத்து கஸ்தூரி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ல் உத்தரவிட்டார். இதையடுத்து டிஎஸ்பி நிலையில் உள்ள அதிகாரி,விசாரணையை தொடங்கி உள்ளார். வளையாபதியை தொடர்ந்து பிரபுவிடம் விசாரணையை தொடங்கியுள்ளார்.