பைக் மீது மோதிய கார்..துடிதுடித்து பிரிந்த உயிர்..கதறி அழுத உறவினர்கள் | Papanasam

x

பைக் மீது மோதிய கார்..துடிதுடித்து பிரிந்த உயிர்..கதறி அழுத உறவினர்கள் | Papanasam

பாபநாசம் அருகே தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வடக்கு மாங்குடியைச் சேர்ந்த அபுசாலி என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தஞ்சை - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத நிலையில் சாலைப் பணிகள் அங்கு முழுமையாக நிறைவடையாததால் விபத்துகள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்