"100 நாள் வேலை பறிபோகிறது" - கிராம மக்கள் வேதனை
கோவில் பாப்பாக்குடி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை பறிபோகும் என்றும், கிராமத்திற்கு தேவையான வசதிகள் எளிதில் கிடைக்காதென்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story