வருண பகவானை திட்டித் தீர்த்த மீம்ஸ் மன்னன்.. வைரலான அடுத்த வீடியோ
தென்காசி மாவட்டம் குருவன்கோட்டையை சேர்ந்த பிரபல மீம்ஸ் மன்னன் கணேசன், விவசாயிகளுக்கு உதவுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல மீம்ஸ் மன்னனும், விவசாயியுமான கணேசன், வட மாவட்டங்களை போல தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வேண்டுமென வருண பகவானிடம் வேண்டி வீடியோ வெளியிட்டார். அது சமூக வலைதளங்கள் மற்றும் தந்தி டிவியின் வாயிலாக வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில், தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் வருண பகவானுக்கு நன்றி தெரிவித்துள்ள கணேசன், இந்த மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு உதவுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..
Next Story