`தலைக்கு தலை காவு'-நெல்லையை உலுக்கிய மணிகண்டன்-சம்பவத்தின் பகீர் பின்னணி
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அம்பை அருகேயுள்ள கோட்டராங்குளத்தில் சிவராமன் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனை சிவராமனின் உறவினரான மாயாண்டி கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாயாண்டி, அவரது சகோதரியும், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சிவராமனின் தாய் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், சேரன்மகாதேவியில் பதுங்கி இருந்த மாயாண்டியை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பியோட முயன்ற அவருக்கு கை முறிந்ததாக கூறப்படுகிறது.
Next Story