மகாகவி பாரதி படித்த பள்ளியின் வகுப்பறை இப்போ எப்படி இருக்கு தெரியுமா? மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, நெல்லையில் அவர் படித்த பள்ளி வகுப்பறையில் மாணவ மாணவிகள் பாரதியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து மாணவிகள் பாரதியின் பாடல் பாடி கவி அஞ்சலி செலுத்தியதுடன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.
நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது பள்ளி படிப்பை படித்தார். அவர் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயருடன் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story