மினி கிராமமான லயோலா கல்லூரி - பாரம்பரிய வைப்-ல் மாணவர்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, லயோலா கல்லூரியில், சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக வேட்டி, சேலையில் வருகை தந்திருந்த மாணவ, மாணவிகள், ஆட்டம் பாட்டம் என கொண்டாடி தீர்த்தனர். அத்துடன், பாரம்பரிய முறைப்படி முளைப்பாரி, கரகம், மாட்டு வண்டி, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி என கல்லூரி வளாகத்தை மினி கிராமம் ஆக்கியதோடு, குடிசைகள் அமைத்து அதற்கு தமிழ் இலக்கிய பெயர்களை வைத்தது கவனத்தை ஈர்த்தது.
Next Story