``கை வைக்காதீங்க..தப்பு பண்ணது நீங்க''-குழந்தையுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள் -கோவையில் பரபரப்பு

x

கோவை நீதிமன்ற வளாகம் அருகே கடந்த 2023 ஆம் ஆண்டு கோகுல் என்பவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சண்முக கிருஷ்ணன், சூர்யா மற்றும் ஹரிஹரன் ஆகிய மூவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிணையில ஜாமீனில் வெளிவந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 20 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக மூவரும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர், போலீசார் பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி, கோவை நீதிமன்றம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு அவர்களை அங்கிருந்து போலீசார் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்