கோவையை அதிரவைத்த சம்பவம்.. துக்க வீட்டில் துடி துடித்து பறிபோன 3 பேர்

x

கோவையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று கணபதி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமலக்ஷ்மி இறந்த நிலையில், ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்ட போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீட்டினுள் புகை சூழ்ந்ததால் பலரும் வெளியேறினர். இதில், பத்மாவதி, பானுமதி ராஜேஸ்வரன், ஸ்ரீராம் ஆகிய நான்கு பேர் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்த அறையில் மாட்டிக்கொண்டனர். அவர்களை தீக்காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பத்மாவதி, பானுமதி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ராஜேஸ்வரன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்