முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படைப்புகள் நாட்டுடைமை - ராசாத்தி அம்மாளிடம் அரசாணை வழங்கப்பட்டது

x

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனைத்து படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் தமிழ்நாடு நாட்டுடைமை ஆக்கியது. இந்த நிலையில் அதற்கான அரசாணையினை அவரது துணைவியார் ராசாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அதனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சரின் கருணாநிதியின் படைப்புகளை நாட்டுமையாக்கியதற்காக தாயாளு அம்மாள் மற்றும் ராசத்தி அம்மாள் குடும்பத்தினருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்ததாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்