`இளைஞர் இறப்பில் மர்மம்' - ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம் கரிவெட்டி கிராமத்தை சேர்ந்த அருள்பாண்டியன், கடந்த 14-ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்ற நிலையில், கடந்த 19-ம் தேதி விருத்தாச்சலம் அருகே மணிமுத்தாற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், இளைஞரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, மூன்றாவது நாளாக அவரது உடலை வாங்க மறுத்து போராடி வரும் உறவினர்கள், ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற இளைஞரின் தாயார் திடீரென மயக்கமடைந்த நிலையில், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். தொடர்ந்து இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இளைஞரின் உடலை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்