அரசு அதிகாரிகளுக்கே அல்லு விட வைத்த நபர்..கடைசியில் அம்பலமான நாடகம் | Kanniyakumari

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், தன்னை லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் என அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சட்டத்திற்கு புறம்பான சில வாகன ஆவணங்களை தயார் செய்து தருமாறும் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்த நிலையில், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் அவரை பிடித்து வைத்து, காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து விசாரித்ததில், அவரது பெயர் சுஜீவன் என்பதும், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என்ற பெயரில் பல முறைகேடுகளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலி லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சுஜீவனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்