மீனவர்கள் வலையில் கல்லோடு பிணம்..இப்படியொரு கோர மரணம்..நினைத்து பார்க்கவே மனம் பதறும்
அறந்தாங்கி அருகே மீனவர் வலையில் ஆண் சடலம் உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதிப்பட்டினம் பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது இப்ராம்சா என்பவர் வலையை கரை இழுத்தபோது மீன்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடலில் சடலம் மிதக்காமல் இருப்பதற்காக அதன் மேல் பெரிய கல் வைத்து, கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.
தகவலறிந்த கடலோர காவல் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தின் மீது கட்டப்பட்டு இருந்த கற்களை அகற்றி, உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story