மியான்மர் மீனவர்களை வாழவைத்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது இதுதான்!
வங்க கடலில் ஏற்பட்ட புயல், மழை, கடல் சீற்றத்தின் காரணமாக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் சென்ற படகின் நங்கூரம் அறுந்து, திக்கு திசை தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். படகில் இருந்த உணவும் தீர்ந்து போனதால் பசியினால் வாடிய அவர்களுக்கு, நாகை மீனவர்கள் உணவு அளித்து உதவினர். தகவலின் பேரில் இந்திய கடலோர காவல் படை கப்பல் அங்கு சென்று, மியான்மர் மீனவர்கள் நான்கு பேரையும், அவர்களது தெப்ப படகையும் பத்திரமாக மீட்டு இன்று காலை நாகை துறைமுகம் அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story