கடற்கரையில் அதிர்ச்சி- இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் - திகைத்து நின்ற மக்கள்
மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இங்கு இனப்பெருக்கத்திற்காக கடல் ஆமைகள் மற்றும் டால்பின்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கடலில் கலக்கப்படும் கழிவுநீர் காரணமாக டால்பின் இறந்ததா? அல்லது விசைப்படகில் அடிபட்டு இறந்ததா? என அதிகாரிகளின் சோதனைக்கு பின்னரே தெரியவரும்.
Next Story