"நாய் கடிச்சுரும் கட்டிவைங்கனு சொன்னேன்..அடிச்சிட்டாங்க".. கடைபுகுந்து கைவைத்த அதிமுக புள்ளி

x

ஓசூர் அருகே வளர்ப்பு நாயால் ஏற்பட்ட பிரச்சினையால், மளிகை கடைக்காரரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆட்களோடு சென்ற தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். மளிகைக்கடை வைத்துள்ள இவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராம் வளர்க்கும் நாய் துரத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஜெயராமின் மனைவியிடம் எச்சரிக்கை விடுத்த‌தால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வி.டி.ஜெயராமன், ஆதரவாளர்களோடு மளிகைக்கடைக்கு சென்று வேணுகோபாலை சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிசிடிவி காட்சி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்